தமிழ்நாட்டில் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா இரண்டாம் கட்ட அலை பல்லாயிரக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியுள்ளது . கோடிக்கணக்கில் மக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு மத்திய, மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
இந்நிலையில் தமிழக முதலவர் முக.ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு
நிவாரணங்களும் பாதுகாப்பும் வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என அறிவித்தார். முடிந்தவர்கள் உதவுமாறு தெரிவித்தார். தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்க கோரிக்கை விடுத்தார். இதனால் தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் பலர் பல உதவி தொகைகளை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாம் மகள் சௌந்தர்யா அவர்கள் ரூபாய் 1 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார். இந்த ஒரு கோடி ரூபாயை தனது கணவர் விசாகன் அவர்களால் நடத்திவரும் அபெக்ஸ் பார்மசி நிறுவனத்தின் சார்பாக தமிழக அரசு கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரூபாய் 25 லட்சம் அஜித் சார்பாக தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் நடிகர் சிவகுமார் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்திக் ஆகியோர் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக சந்தித்து 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்துறையை சார்ந்த பலரும் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது உதவிகளை அன்பியுள்ளனர்