கொம்பேறி மூக்கன் இந்த பாம்புதான் தான் கடித்தவர் இறந்து விட்டாரா என்று பார்க்க சுடுகாடு வரை செல்லும் என்று அந்த காலத்தில் நம்பி வந்தனர்.

இந்தவகை பாம்பினம் கடித்தாலும் விஷம் ஏறாது. கொம்பேறி மூக்கன் பாம்பு ரொம்பவே சுறுசுறுப்பானது. வேகமாக செல்லக்கூடியது. நாம் கண் இமைத்து பார்ப்பதற்குள் மரத்தின் உச்சிக்கே சென்றுவிடும். அப்பேற்பட்டதான பாம்புக்கு விஷம் இல்லை. இவை கடித்தாலும் யாருக்கும் ஒன்றும் ஆகாது.

ஆனால் அக்காலத்தில் இந்த பாம்பு கடித்தால் மருத்துவரிடம் சென்று காண்பிப்பார்களாம். மருத்துவர் விஷம் ஏறவில்லை என்று கூறினாலும் அந்த பாம்பு மறுபடியும் கடிக்கும் என்று எண்ணி கடித்தவரை சுடுகாட்டுக்கு கூடி சென்று ஈம சடங்கு செய்வார்களாம். ஏன்னென்றால் கொம்பேறி மூக்கன் பாம்பு மரத்தின் உச்சியிலிருந்து தான் கடித்தவர் செத்துட்டாரா என்று பார்க்குமாம் .

இவர்கள் ஈம சடங்கை செய்வதை பார்க்கும் போது அவர் செத்துவிட்டார் என்று எண்ணி சென்றுவிடுமாம். இல்லை என்றால் அவரை மறுபடியும் மறுபடியும் கடிக்க வரும் என்று நம்பி கொண்டிருந்தனர்.