தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலிமைச்சராக பதவியேற்றார் . மதுரையை சேர்ந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் மே10 முதல் மே 24 வரை தளர்வுடன் கூடிய முழுஊரடங்கு அமல் படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோளை தெரிவித்துள்ளார்
அதில் நான் செய்ந்நன்றி மறவாதவன், பணம் பெறாது என்னை 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த உங்களின் சந்திப்பதை விட எனக்கு கடமைவேறில்லை எனவும் ,அனால் தலைவர் (முக.ஸ்டாலின்) அறிவுறுத்தியபடி நன் முன்னுதாரணமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும், ஊரடங்கு முடியும்வரை என்னை சந்திப்பதை தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டு கொள்கிறேன் என தனது சமூகவலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்