புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இந்த கடிதத்தை சோனியாகாந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் எச்.டி.தேவெ கௌடா, சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து பிரதமருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளை கைவிடக்கோரியும் கொரோனா தடுப்பூசி முகாம்களை உருவாக்க வேண்டும் எனவும் , கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்தவர்களுக்கு உதவித்தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கவேண்டும் .ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவும், கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பி.எம் கேரிலிருந்து நிதி ஒதுக்கவேண்டும் மற்றும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம் திரும்ப பெறவேண்டும் போன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது .