அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அது புயலாக நாளை மாறுவதால் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது கோடைகால பருவம் என்பதால் கேரளா மற்றும் தமிழகம் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அது புயலாக மாறி நாளை அது புயலாக கடக்க உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் தாழ்வுப்பகுதி ஏற்பட்டு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயல் கடக்க உள்ளது. இதை புயலுக்கு டவ் – தே புயல் என இந்திய வானிலை மையம் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .. இந்த டவ் – தே புயல் குஜராத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விட்டு இந்த டவ் – தே புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் அழிவிற்கு எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .