இந்தியாவின் கிரிக்கெட் அணிக்காக இந்தியாவின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அவர்கள் ஆஸ்திரேலியாவின் பார்முலாவை பயன்படுத்தி நல்ல வீரர்களை என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் கிரேக் சாப்பல் 72 கூறியுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டிராவிட் 2016 முதல் 2019 வரை இந்தியா ஏ , 19 வயது அணிக்கான
பயிற்சியாளராக இருந்தார். பிறகு தற்போது இந்திய கிரிக்கெட் அகாடமி தலைவராக பொறுப்பேற்று அங்கே பல இளம் தலைமுறையினரை நல்ல திறமையான வீரர்களை பட்டை தீட்டி வருகிறார். இது குறித்து ஆஸ்திரிலியா முன்னாள் கேப்டன் கிரேக் சாப்பல் கூறுகையில்
தரமான வீரர்களை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவுக்கு நிகர் யாருமில்லை . இந்த நிலையில் சிறிது வருடமாக மாற்றம் உருவாகியுள்ளது . தற்போது இந்தியா, இங்கிலாந்து நாடுகள் நல்ல திறமையான வீரர்களை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவை முந்தியுள்ளது. ராகுல் டிராவிட் அவர்கள் சிறப்பான இளம் வீரர்களை உருவாக்குவதில் ” ஆஸ்திரேலியாவின் பார்முலாவை” பயன்படுத்தி சிறந்த வீரர்களை உருவாக்கி அசத்தி வருகிறார் என கிரேக் சாப்பல் கூறியுள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் களமிறங்கிய வீரர்கள் இந்தியா ஏ அணி எனவும் இது இந்தியாவின் இரண்டாம் தர அணி என அனைவராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் அந்த புது வீரர்கள் அனைவரும் தனது திறமையை நிரூபித்து சர்வதேச அனுபவமிக்க வீரர்கள் போல தங்கள் திறமையை நிரூபித்தனர்.
பிரிஸ்பேன் டெஸ்டை வைத்தே அனைவராலும் இந்திய புது வீரர்கள் எந்தளவு திறமையும் வளர்ச்சியுமிக்கவர்கள் என்று புரிகிறது என்று கிரேக் சாப்பல் கூறியுள்ளார்.