தமிழ்நாட்டில் மிக தீவிரமாக பரவிவரும் கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். பல ஆயிரக்கணக்காக மக்கள் பாதிக்கப்பட்டும், இறந்தும் வருகின்றனர். தமிழகத்திலே கொரோனா அதிகம் பதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை இருந்து வரும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக கோவை மாநிலம் பாதிப்பில் அதிகமாக உள்ளது.
இந்த கொரோனா பாதிப்பை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அதிமுகவும், திமுகவும் இனைந்து செயல்பட்டதை கண்ட கோவை மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
அதி தீவிரமாக பரவிவரும் கோரோனோவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் கோவையில் இந்த கொரோனா பரவலை தட்டுக்கு ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் திமுக அமைச்சர்கள் கலந்துகொண்ட நிலையில் எஸ்.பி. வேலுமணி அவர்களும் அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ க்களும் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தை ராமசந்திரன் (வனத்துறை) மற்றும் சக்கரபாணி (உணவுத்துறை)ஆகியோர் தலைமையில் நடைபெற்றது . இந்த மாபெரும் இரண்டு கட்சிகளும் தங்களுடைய போட்டி மற்றும் எதிர்ப்பை தள்ளிவைத்துவிட்டு மக்களுக்காக ஒரே ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற்றது கோவை மாநகர மக்களை மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் கொண்டு சேர்த்தது . இதை பொது மக்கள் அனைவரும் வரவேற்றனர்.