Share
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் நேற்றய தினம் நன்கொடை வழங்குமாறு பொது மக்களுக்கும் நிறுவனகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் நடிகர் சிவகுமார் கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து நேரடியாக காசோலை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சிவகுமார் தலைவர் கருணாநிதியை 40 வருடங்களாக சந்தித்து வந்துள்ளேன். இன்று அவருடைய அரசியல் வாரிசாக உள்ள மு க ஸ்டாலினை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறினார்.
Share