இன்றைய சூழலில் பைக், கார், மற்றும் பிற வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே அதற்கு தேவையான பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பாதிப்பு அடைகிறது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கின்றன.
இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 94.09 எனவும், டீசல் லிட்டருக்கு 87.81 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 93.54 எனவும், டீசல் லிட்டருக்கு 87.49 எனவும்
இருந்தது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து 94.09 ரூபாயாகவும், டீசல் லிட்டருகிய 32 காசுகள் உயர்ந்து 87.91 எனவும் இன்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
எப்போதும் மலை போல் உயரும் பெட்ரோல், டீசல் விலைகள் மட்டும் குறையும்பொழுது சிறுகாசாக குறைகிறது எனவும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.