நடிகர் கமல் அவர்களால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த வருட சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாமல் தோல்வியை சந்தித்தது. துணைத்தலைவர், பொதுச்செயலர் போன்ற முக்கிய பதவி வகித்த நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில் மேலும் ஒரு முக்கிய பதவியான பொதுசெயலர் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் இன்று பதவி விலகியுள்ளார்.
நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது முக்கிய கட்சியாக பார்க்கப்பட்ட ம.நீ.ம.,கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதில் முக்கிய வேட்பாளராக கருதப்பட்ட நடிகர் திரு. கமலஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் நின்று தோல்வியடைந்தார். இதன் காரணமாக அக்கட்சியின் மஹேந்திரன், பொன்ராஜ் மற்றும் பொதுசெயலர் குமரவேல் போன்றோர் கூண்டோடு விலகினர்.
இந்நிலையில் தற்போது பொதுச்செயலர் சந்தோஷ்பாபு அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட காரணங்களால் நான் ம.நீ.ம கட்சியிலிருந்து விலகுகிறேன். அக்கட்சியினர் காட்டிய பாசத்திற்கும் நட்பிற்கும் நன்றிகள் என்று ட்விட் செய்துள்ளார். இவர் தகவல் தொடர்புத்துறை செயலகத்தில் ஐ.ஏ.எஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ம.நீ.ம கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போலெ கட்சி சுற்றி சூழல் பிரிவின் பொதுச்செயலர் பத்மப்ரியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது விலகலை அறிவித்தார். இவர் மதுரவாயல் தொகுதியில் 33,401 வாக்குகள் பெற்று 3ம் கட்சியாக பெருமான்மையை நிறுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . ம.நீ.ம கட்சியில் என்ன குளறுபடி நடக்கிறது என்று பொதுமக்களும் பேசிக்கொள்கின்றனர்.