தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து
முன்னெச்சரிக்கை எடுத்துவரும் நிலையில் தடுப்பு மருந்துகள் மற்றும் போதிய ஆக்ஸிஜன் பெற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இதை குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்:
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இல்லாமலும் போதியளவு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர், இல்லாமலும் கொரோனா பாதித்த பொதுமக்கள் அனைவரும் அல்லல் படுகின்றனர் . மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைவசதி இல்லாமல் திண்டாடுகின்றனர்.
கொரோனா பாதித்தவர்களுக்கு முக்கிய உயிர்காக்கும் பொருளான ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக
பலர் மூச்சு திணறலால் உயிரிழக்கின்றனர் இதை அறிந்த எனக்கு மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறேன் .
மக்களை காப்பது அரசின் கடமை. எனவே அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் , தடுப்பு மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை கேட்டு கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி அவரது வலைதள பக்கத்தில் தெரிவித்தார் .
STAY HOME !! STAY HOME !! டைம்ஸ் தமிழ் !